மூன்று கேமராக்களுடன் இந்தியாவிற்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்

0
118

மூன்று கேமராக்களுடன் இந்தியாவிற்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன் | Samsung Galaxy A7 2018

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ7 2018 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனதின் முதல் மூன்று கேமராக்கள் கொண்டஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த கேலக்ஸி ஏ7 2018 ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிற்குபோட்டியாக களமிறங்கயுள்ளது.
கேலக்ஸி ஏ7 2018 ஸ்மார்ட்போன் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் AI செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. கேலக்ஸி ஏ7 2018 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் என இரண்டு விதமாக வெளியாக உள்ளது. 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.23,990-ஆகவும் 6ஜிபி கொண்டஸ்மார்ட்போன் மாடலின் விலை ரூ.28,990-ஆகவும் நிர்ணயிக்க பட்டுள்ளது.

Samsung Galaxy A7 2018
Samsung Galaxy A7 2018

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ7 2018-ன் அம்சங்கள் | Samsung Galaxy A7 2018
இரட்டை நானோ சிம்
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஒஸ் இயங்குதளம்
6 அங்குல முழு HD (1080×2240) டிஸ்ப்ளே 18.5:9 விகிதம்
சாம்சங்கின் பிரத்தியேக எக்ஸிநோஸ் 7885 SoC
2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசசர்
4/6 ஜிபி ரேம் 64/128 ஜிபி ரோம்
512 ஜிபி வரை விரிவு படுத்தும் மைக்ரோ SD சப்போர்ட்
24 எம்பி + 8 எம்பி + 5 எம்பி கொண்ட மூன்று ரியர் கேமரா
24 எம்பி கொண்ட செல்பீ கேமரா
வலப்புற சைடு கைரேகை சென்சார்
3300mAh கொண்ட பெரிய பேட்டரி