ஐபோனுக்கு போட்டியாக களம் இறங்கிய சாம்சங் S10

0
71

ஐபோனுக்கு போட்டியாக களம் இறங்கிய சாம்சங் S10 | Samsung Galaxy S10

சாம்சங் நிறுவனம் தற்போது இந்தியாவில் பல புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இநிலையில் அந்நிறுவனத்தின் உயரக ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி S வரிசையின் அடுத்த படைப்பு வெளியானது. இதற்கு முன் வெளியான S வரிசையின் இரண்டு போன்களை மட்டும் வெளியிட்டது.

samsung galaxy s10
samsung galaxy s10

இந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி S10e, சாம்சங் கேலக்ஸி S10, சாம்சங் கேலக்ஸி S10+ என மூன்று ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் உலகில் முதல் முறையாக இன்ஃபினிட்டி-O வகை டிஸ்பிளேவை அறிமுகம் செய்துள்ளது. அதாவது டிஸ்பிளே இடையே துளையிட்டு கேமராவை பொருத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S10e அம்சங்கள்:

samsung galaxy s10
samsung galaxy s10

5.8″ இன்ச் முழு எச்டி 1080×2280 பிக்சல் கொண்ட டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி-O டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 அல்லது சாம்சங் எக்ஸிநோஸ் 9820 செயலி மூலம் செயல்படுகிறது. 6GB அல்லது 8GB ரேம் மெமரி, 128GB அல்லது 256GB இன்பில்ட் மெமரியுடன் கிடைக்கிறது. 12எம்பி + 16எம்பி என இரண்டு ரியர் கேமரா மற்றும் 10எம்பி கொண்ட ஒரு செல்பீ கேமரா கொண்டுள்ளது. USB Type-C மூலம் சார்ஜ் செய்யகூடிய 3100mAh பேட்டரி, பக்கவாட்டு கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இந்த மொபைல் ரூ.53,300 முதல் ஆரம்பமாகிறது.

சாம்சங் கேலக்ஸி S10 அம்சங்கள்:

samsung galaxy s10
samsung galaxy s10

6.1″ இன்ச் குவாட் எச்டி 1440×3040 பிக்சல் கொண்ட டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி-O டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி S10 குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 அல்லது சாம்சங் எக்ஸிநோஸ் 9820 செயலி மூலம் செயல்படுகிறது. 8GB ரேம் மெமரி, 128GB அல்லது 512GB இன்பில்ட் மெமரியுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. 12எம்பி+12எம்பி+16எம்பி மூன்று பவர்புல் மற்றும் 10எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. USB Type-C மூலம் சார்ஜ் செய்யகூடிய 3400mAh பேட்டரி, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இந்த மொபைல் ரூ.63,900 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி S10+ அம்சங்கள்:

samsung galaxy s10
samsung galaxy s10

6.4″ இன்ச் குவாட் எச்டி 1440×3040 பிக்சல் கொண்ட டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி-O டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த மொபைல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 அல்லது சாம்சங் எக்ஸிநோஸ் 9820 செயலி மூலம் செயல்படுகிறது. 8GB அல்லது 12GB ரேம் மெமரி, 128GB, 512GB அல்லது 1TB இன்பில்ட் மெமரியுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இது உலகில் 12GB ரேம் கொண்ட முதல் போன் ஆகும். இந்த போனும் 12எம்பி+12எம்பி+16எம்பி மூன்று பவர்புல் மற்றும் 10எம்பி+8எம்பி என இரண்டு செல்பீ கேமரா கொண்டுள்ளது. USB Type-C மூலம் சார்ஜ் செய்யகூடிய 4100mAh கொண்ட பெரிய பேட்டரி, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இந்த மொபைல் ரூ.71,000 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.