ரெட்மி நோட் -க்கு போட்டியாக சாம்சங்-ன் புதிய மொபைல்

0
57

ரெட்மி நோட் -க்கு போட்டியாக M30-யை களம் இறக்குகிறது சாம்சங் | Samsung Galaxy M30

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த மொபைல் கேலக்ஸி M30 ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் வெளியான M10 மற்றும் M20 மாடல்கள் இன்ஃபினிட்டி-V வகை டிஸ்பிளே கொண்டு விற்பனைக்கு வெளி வந்தது. ஆனால் கேலக்ஸி M30 இன்ஃபினிட்டி-U வகை டிஸ்பிளே உடன் அறிமுகம் ஆக இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி M30 மாடல் 6.4″ டிஸ்ப்ளே உடன் 1080 x 2280 பிக்சளுடன் 19:9 விகிதத்துடன் விற்பனைக்கு வருகிறது. சாம்சங் கேலக்ஸி M30 ஸ்மார்ட்போன் இரண்டு 5 மெகா பிக்சல் மற்றும் ஒரு 13 மெகா பிக்சல் என 3 ரியர் கேமராக்கள் மற்றும் ஒரு 16 மெகா பிக்சல் செல்பி கேமராவுடன் வெளிவருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்பில்ட் மெமரியுடன் கிடைக்கும் மேலும்512ஜிபி வரை தனியாக விவரித்துகொள்ள கூடிய SD கார்டு வசதியையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு செயலி 9.0 ஓரியோ-வை அடிப்படையாக கொண்ட சாம்சங்-ன் எக்ஸ்பிரியன்ஸ் ஓஎஸ் மூலம் இயங்கபடுகிறது.

galaxy m30
galaxy m30

USB Type-C மூலம் சார்ஜ் செய்யகூடிய 5,000mAh கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டுள்ள இந்த மொபைல் இந்தியாவில் 15,000 என விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.