உலகின் முதல் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் சாம்சங் அசத்தல் அறிமுகம்

0
112

உலகின் முதல் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் சாம்சங் அசத்தல் அறிமுகம் | Samsung A9 2018

சாம்சங் நிறுவனம் கோலா லம்பூர்-ல் நடைபெற்ற தனது “4X FUN” நிகழ்ச்சியில் தனது அடுத்த புது மாடல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ9 (Samsung Galaxy A9), என்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தான் பின்புறம் நான்கு கேமரா வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

samsung-galaxy-a9
samsung-galaxy-a9

சாம்சங் கேலக்ஸி ஏ9 -2018 | Samsung Galaxy A9-2018 அம்சங்கள்
6.3′ இன்ச் முழு எச்.டி பிளஸ் வசதியுடன் கூடிய 1080×2220 பிக்சல் கொண்ட 18.5:9 விகிததுடன் கூடிய சூப்பர் அமோலட் இன்பினிட்டி டிஸ்பிளேவினை கொண்டுள்ளது. 2.2GHz க்வாடு கோர் மற்றும் 1.8GHz க்வாடு கோர் கொண்ட ஒரு ஆக்டா கோர் செயலியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்டுள்ளது. இது மட்டுமில்லாமல் எஸ்.டி கார்டு மூலம் 512ஜிபி வரை தனியாக விவரித்துகொள்ள கூடிய வசதியையும் கொண்டுள்ளது.

samsung galaxy a9
samsung galaxy a9

கேமராவை பொறுத்தவரை பின்புறம் நான்கு கேமராவும் முன்புறம் ஒரு கேமராவும் கொண்டுள்ளது. பின்புறம் 24 மெகா பிக்சல் மெயின் கேமரா 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைட் கேமரா 10 மெகா பிக்சல் டெலிபோட்டோ கேமரா 5 மெகா பிக்சல் டெப்த் கேமரா என நான்கு கேமரா ஓவொன்றும் ஒரு ஒரு வேலையை செய்கிறது. முன்புறம் 24 மெகா பிக்சல் கொண்ட ஒரு செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ் மூலம் இயங்கபடுகிறது. இந்த மொபைல் பின்புறம் பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஸ் அன்லாக் வசதி, வைஃபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ், என்.எப்.சி போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த மொபைல் USB Type-C மூலம் சார்ஜ் செய்யகூடிய ஒரு 3800 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டுள்ளது. இந்தியாவில் இதற்கான விலையை அறிவிக்கவில்லை ஐரோப்பியாவில் 599 யூரோவிற்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.