ப்ராக்டிஸ் செய்யும் வீடியோவை வெளியிட்ட சச்சின்.! கலாய்த்த கிரிக்கெட் நிறுவனம்

0
49

சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், வினோத் காம்பிலியுடன் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும் ‘நீண்ட நாட்களுக்கு பிறகு வலைபயிற்சியில் ஈடுபடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வினோத் காம்பிலியும் நானும் ஒரே அணியில் விளையாடியிருக்கிறோம். அது சிலருக்கு மட்டும் தான் தெரியும். இந்த நிகழ்வு எங்களை சிறு வயதுக்கு அழைத்து சென்றது’ என்று பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் பவுலிங் செய்யும் போது சச்சின் டெண்டுல்கர் பவுலரின் லைனை தாண்டி பந்து வீசினார். அதை நோபால் என அம்பயர் ஸ்டீவ் பக்னர் படத்துடன் சுட்டிக்காட்டி ஐசிசி கமெண்ட் செய்திருந்தது.

சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்த போது அம்பயர் ஸ்டீவ் பக்னர் பல முறை தவறான முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டீவ் பக்னர் புகைப்படத்துடன் தன்னை கலாய்த்த ஐசிசியின் இந்த கமெண்ட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘இந்த முறையாவது நான் பேட்டிங் செய்யாமல் பவுலிங் செய்கிறேன்.

நடுவரின் முடிவே இறுதியானது’ என்று சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுளார்.