இன்று மாலை 6 மணிக்கு இணையதளத்தை தெரிக்கவிடபோகும் சாமி-2 படக்குழு.!

0
185

சாமி முதல் பாகம் விக்ரம் திரிஷா விவேக் மற்றும் பலர் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

vikram saamy2
vikram saamy2

இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசி கட்ட படப்படிப்பு காரைக்கடியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இதன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தை ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படமும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் சியானின் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் என கிசுகிசுக்கப்படுகிறது.