இந்த தடவ எல்லாத்தையும் மாத்துறோம்.. நாங்க அடிக்கிற அடிய மட்டும் பாரு!! முடிஞ்சா தடுத்து பாரு.. தெறிக்கவிட்ட ரோஹித் சர்மா

0
99

இந்த தடவ எல்லாத்தையும் மாத்துறோம்.. நாங்க அடிக்கிற அடிய மட்டும் பாரு!! முடிஞ்சா தடுத்து பாரு.. தெறிக்கவிட்ட ரோஹித் சர்மா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் குறித்து பேட்டியளித்த ஹிட்மேன் ரோஹித் சர்மா பேட்டியிலேயே தெறிக்கவிட்டுள்ளார்.டெஸ்ட் தொடரில் நம்பர் 1 அணியாக இருந்தும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என்று வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. மேலும் உலக கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளிலும் மெர்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

rohit-sharma
rohit-sharma

டெஸ்ட் தொடரில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ள இந்திய அணி, நல்ல ஃபார்மில் உள்ள ரோஹித் சர்மாவை மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்த்துள்ளது. தென்னாப்பிரிக்க தொடரில் பாதியில் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, அதன்பிறகு இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்ஸாகும் என்பதால் பவுன்ஸரை தரமான புல் ஷாட்டுகள் மூலம் பறக்கவிடக்கூடிய ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய தொடரில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ரோஹித் சர்மா தற்போது நல்ல ஃபார்மில் உள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்களை அடித்தும் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்துவரும் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடி டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்கும் முனைப்பில் உள்ளார்.

மேலும் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணி இந்த முறை தொடரை வென்று வரலாறு படைக்கும் முனைப்பில் உள்ளது. இந்திய அணி, இளம் திறமைகளும் அனுபவமும் கலந்த மிகச்சிறந்த அணியாக உள்ளது. மேலும் வேகப்பந்து வீச்சு யூனிட்டும் முன்னெப்போதையும் விட சிறந்து விளங்குவதால் இந்திய அணி தொடரை வெல்லும் நம்பிக்கையில் உள்ளது.

முதலில் டி20 தொடர் நடக்கிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள்(21ம் தேதி) நடக்கிறது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா, மூன்றுவிதமான போட்டிகளிலும் இந்திய அணி சிறந்து விளங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட், டி20 ஆகிய மூன்று தொடர்களையும் வெல்வதே இந்திய அணியின் இலக்கு. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சிறப்பாக ஆடுவது என்பது ஒரு அணியாக எங்களுக்கு உத்வேகமாக அமையும். மேலும் உலக கோப்பைக்கு முன் இப்படியொரு தொடரில் வெல்வது எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கும்.

rohit-sharma
rohit-sharma

இந்திய அணி பெர்த்திலோ அல்லது பிரிஸ்பேனிலோ தான் ஆடும். கடந்த முறை பெர்த்தில் ஆடினோம், பிரிஸ்பேனில் ஆடவில்லை. ஆனால் இந்தமுறை பிரிஸ்பேனில் ஆடுகிறோம், பெர்த்தில் ஆடவில்லை. இந்த இரண்டு சூழலுமே மிகவும் சவாலானது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணியில் உயரமான பவுலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பயங்கரமான பவுன்ஸர்களை வீசுவார்கள்.

அதை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்திய அணி வீரர்கள் மிக உயரமானவர்கள் கிடையாது. ஆனால் இதுபோன்ற அச்சுறுத்தல்களை எல்லாம் மாற்றும் முனைப்பில் இருக்கிறோம். எந்தவிதமான சவால்களையும் எதிர்கொள்ள தயாராய் இருக்கிறோம். பவுன்ஸர்கள் வந்தால் நான் என்னுடைய ஆட்டத்தை அசால்ட்டாக ஆடுவேன் என்று ரோஹித் சர்மா தெறிக்கவிட்டுள்ளார்.