ரோஹித்தின் பருப்பு இங்க வேகாது.. பயமுறுத்தி பார்க்கும் ஆஸ்திரேலிய பவுலர்!!

0
77

ரோஹித்தின் பருப்பு இங்க வேகாது.. பயமுறுத்தி பார்க்கும் ஆஸ்திரேலிய பவுலர்!!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது.டெஸ்ட் தொடரில் நம்பர் 1 அணியாக இருந்தும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என்று வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது.

rohit
rohit

மேலும் உலக கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளிலும் மெர்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.டெஸ்ட் தொடரில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ள இந்திய அணி, நல்ல ஃபார்மில் உள்ள ரோஹித் சர்மாவை மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்த்துள்ளது.

தென்னாப்பிரிக்க தொடரில் பாதியில் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, அதன்பிறகு இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்ஸாகும் என்பதால் பவுன்ஸரை தரமான புல் ஷாட்டுகள் மூலம் பறக்கவிடக்கூடிய ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய தொடரில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ரோஹித் சர்மா தற்போது நல்ல ஃபார்மில் உள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்களை அடித்தும் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்துவரும் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடி டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்கும் முனைப்பில் உள்ளார்.

rohit-sharma
rohit-sharma

இந்நிலையில், ரோஹித் சர்மா குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கூல்டர் நைல், ரோஹித் சர்மா மிகச்சிறந்த அபாயகரமான வீரர். அவர் உலகம் முழுதும் ஆடி ரன்களை குவித்த வீரர். எனவே அவரை கவனிக்க வேண்டியது அவசியம். ரோஹித் சர்மாவை சில முறை தொடக்கத்திலேயே வீழ்த்தியுள்ளோம். அவரை தொடக்கத்திலேயே சில முறை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தியுள்ளோம்.

எனவே அதே முறையில் வீழ்த்த முயற்சிப்போம். மேலும் ரோஹித் சர்மா புல் ஷாட்டுகளை விரும்பி ஆடக்கூடியவர். ஆஸ்திரேலிய ஆடுகளங்களோ மிகவும் பெரியவை. எனவே ஸ்லோ பவுன்ஸர்களை வீசி அவரை புல் ஷாட் ஆடவைத்து வீழ்த்த முயற்சிப்போம். இங்கே மைதானங்கள் பெரியவை என்பதால் அவர் ஆடும் புல் ஷாட்டுகள் கேட்ச் ஆக வாய்ப்பிருக்கிறது என்று கூல்டர் நைல் தெரிவித்துள்ளார்.