ரோஹித் சர்மாவை கண்டுகொள்ளாத கோஹ்லி, பும்ராஹ் !!

0
144

ரோஹித் சர்மாவை கண்டுகொள்ளாத கோஹ்லி, பும்ராஹ் !! | Rohit Virat Bumrah

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் பும்ரா மற்றும் கேப்டன் கோலி, துணைக் கேப்டன் ரோகித் சர்மாவைத் தவிர்க்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

kohli bumrah
kohli bumrah

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி நேற்று (பிப்.24) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

kohli bumrah
kohli bumrah

போட்டியின் 19-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீச வந்தார். அப்போது, பும்ரா, கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோகித் சர்மா ஆகிய மூவரும் ஆலோசனை நடத்தினர். கோலி, பும்ரா ஆகிய இருவர் மட்டும் பேசிக்கொண்டனர். ரோகித் சர்மா ஏதோ சொல்ல முயற்சிக்க, அதை இருவரும் காதிலேயே வாங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா சிறிது நேரம் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.