CSK -RCB போட்டியை காண நேரில் சென்ற சூப்பர் ஸ்டார்.! புகைப்படம் வீடியோ உள்ளே

0
70

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் இன்று கோலகலமாக துவங்கியது.

முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால், திரைப்பிரபலங்கள் பலரும் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அதில் ஒரு சிலரின் புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்றுள்ளார்.

ரசிகர்களின் கூட்டத்திற்கு நடுவே சென்ற அவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.