ரஜினியின் “பேட்ட” அஜித்தின் “விஸ்வாசம்” எத்தனை காட்சிகள் தெரியுமா.?

0
90

ரஜினியின் “பேட்ட” அஜித்தின் “விஸ்வாசம்” எத்தனை காட்சிகள் தெரியுமா.?

இந்த பொங்கலுக்கு டபுள் ட்ரீட்டாக ரஜினியின் “பேட்ட” அஜித்தின் விஸ்வாசம் இரண்டும் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்போடு வெளியாக இருக்கிறது. இந்தப் படங்கள் வெளி வர இன்னும் இரண்டே நாட்கள் இருப்பதால் கடந்த வாரமே இதற்கான முன்பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

rajinikanth petta
rajinikanth petta

இரண்டு பெரும் தலைகளின் படம் வெளிவருவதால் மற்ற படங்கள் பின்வாங்கி இருக்கின்றன. இருந்த போதிலும் விஸ்வாசம் படம் வெளியிடுவது குறித்து பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன. இறுதியாக பேட்டைக்கு போட்டியாக விஸ்வாசம் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களை திரையிடுவது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைசெயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, ‘‘வழக்கமாக தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிடப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி 10–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை தினமும் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ajith viswasam

பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. இரண்டு படங்களுக்கும் டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு 2 படங்களும் லாபம் ஈட்டி தரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.