அடேய் அது நான் இருக்கவேண்டிய இடம் டா.! மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட பிரியா பவானி ஷங்கர்.!

0
214

அடேய் அது நான் இருக்கவேண்டிய இடம் டா.! மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட பிரியா பவானி ஷங்கர்.!

பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து, அதன் பின் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

அந்த சீரியலில் பார்க்க மிகவும் ஹோம்லியாக இருந்ததால், அதன் பின் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போது, நல்ல கதை தேர்வு கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

அப்படி இவர் நடித்த மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இதைத் தொடர்ந்து இப்போது இவர் எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அதர்வாவின் குருதிஆட்டம் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குரங்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.அதைக் கண்ட இணையவாசிகள் இனி மீம்ஸ் கிரியேட்டருக்கு செம விருந்து தான், இந்த புகைப்படங்களை வச்சு செய்யப்போறாங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar
priya bhavani shankar