நீச்சல் உடையில் போஸ் கொடுத்து நீச்சல் குளத்தை சூடேற்றிய பூனம் பஜ்வா.! வைரலாகும் புகைப்படம்

தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் நடிகை பூனம் பஜ்வா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சினிமாவில் முதன் முதலாக 2005ஆம் ஆண்டு தெலுங்கு மோ ட டி சினிமா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டு பாஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படி தெலுங்கில் அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்து வந்த பூனம் பஜ்வா தமிழில் முதன்முதலாக 2008ஆம் ஆண்டு சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் இழுத்துப் போர்த்திக் கொண்டு குடும்ப குத்துவிளக்கு போல் நடித்து இருந்தார் அதனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தார்கள்.

அந்தவகையில் இவர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் ஒரு காலகட்டத்தில் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாள பக்கம் சென்றுவிட்டார் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பூனம் பஜ்வா தமிழில் மீண்டும் 2015 ஆம் ஆண்டு ஆம்பள என்ற திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் ஹீரோயின் அவதாரம் எடுக்க வேண்டுமென முத்தின கத்திரிக்கா என்ற திரைப்படத்தில் நடித்தார் ஆனால் எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை அதனால் ஆன்ட்டி, அக்கா போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில்  ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

poonambajwa
poonambajwa

இந்த திரைப்படத்தில் இவர் நடித்ததால் ரசிகர்கள் இவரை பார்க்கவே படத்தைப் பார்த்தார்கள். அந்த அளவுக்கு குப்பத்து ராஜா திரைப்படத்தில் கிளாமரில் நடித்து அசத்தினார். சினிமாவில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என அடிக்கடி சமூக வளைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றன.

poonambajwa
poonambajwa

Leave a Comment