பொங்கலுக்கு தொடர் விடுமுறை எத்தனை நாள் தெரியுமா.?

0
105

பொங்கலுக்கு விடுமுறை

விடுமுறை வந்தாலே மக்களுக்கு கொண்டாட்டம் தான் அதுவும் பண்டிகை நாட்களில் அதிக லீவ் என்றால் எப்படி இருக்கும் இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை வரவுள்ளது. பொங்கலுக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Chennai-District-Schools-Holiday
School

ஏற்கனவே ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஜனவரி 14 ஆம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் 6 நாள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. அதாவது ஜனவரி 12 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து. ஆனால் ஜனவரி 14 விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி இரண்டாவது சனிகிழமை, பணி நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.