பொள்ளாச்சி பாலியல் கொடூரவாதிகளுக்கு எதிராக குரல் எழுப்பும் சினிமா பிரபலங்கள்.! யார் யார் தெரியுமா

0
86

முகநூலில் 200 பெண்களை மடக்கி அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது கும்பல். கடந்த 7 ஆண்டுகளாக உல்லாசம் அனுபவித்து வந்த இந்த கொடூரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தின் தலைவனான திருநாவுக்கரசும் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்து விசாரணை நாட்டையே பதபதைக்க வைத்துள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது சினிமா பிரபலங்கள் தங்களது ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிக்காட்டியிருக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்; I strongly condemn these monsters … மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது… இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து. பதிவிட்டுள்ளார்.

சித்தார்த் தனது ட்விட்டரில்; பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்படி கிடைத்தால் தான் அவர்கள் தைரியமாக முன்வந்து அந்த குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி அளிப்பார்கள். சமூக வலைதளங்களை வைத்து பெண்களை மடக்குவது அதிகரித்து வருகிறது. அதில் இருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அடுத்ததாக, தயாரிப்பாளர் அதிதி ரவீந்திரநாத் , பொள்ளாச்சி பாலியல் குற்றங்களுக்கு நீதி தேவை. அந்த வீடியோவை பார்த்தேன். ஏன் யாரும் இது குறித்து பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.