பொள்ளாச்சி சம்பவம் கொடூரத்தின் உச்சம் சத்யராஜ் ஆவேசம்.!

0
53

தமிழகத்தின் பொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கடும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்று திரையுலகப் பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் பொள்ளாச்சி விவகாரம் குறித்து வருத்தத்துடன் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை வந்து அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம். இந்த மனித மிருகங்களைப் பற்றி எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அவர்களுக்கு சட்டப்படி உச்சபட்ச தண்டனையை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். அதுதான் என்னுடைய கோரிக்கை. எப்படி இப்படி மனசு வருதுனு தெரியல’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பள்ளி பாடத்திட்டங்களில் மனநல மருத்துவத்தை, அடிப்படை கல்வியாக கற்பிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.