நோ பார்கிங்கில் நின்ற டூ-வீலரை அடித்து நொறுக்கும் போலிஸ்.!

0
69

police attack bike : சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே கல்லூரி மாணவரின் இரு சக்கர வாகனத்தை அடித்து உடைத்த காவலர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் இன்று ஒரு காணொளி வைரலானது, அதைப்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது, அந்த காணொளியில், சென்னை கடற்கரைச்சாலை போர் நினைவுச் சின்னம் எதிரில் அன்னை சத்யா நகர் எனும் குடிசைப்பகுதி அருகே சாலை ஓரமாக மோட்டார் சைக்கிள் ஒன்று ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளுக்கு சொந்தக்கார மாணவனை சிவப்பு நிற பொலீரோ ரோந்து வாகனத்தில் வந்த எஸ்.ஐ அழைத்து விசாரணை நடத்துகிறார். அப்போது ஓட்டுநர் சீட்டிலிருந்த ஊர்க்காவல்படை காவலர் ரூல் தடியுடன் இறங்குகிறார்.

ரூல் தடியால் மாணவரின் வாகனத்தை சரமாரியாக தாக்கி உடைக்கிறார். ஹெட்லைட், முன்பாகத்தை தாக்கி உடைக்கிறார். இதனால் பதறிப்போன மாணவர் எஸ்.ஐயிடம் அதைக்காட்டிவிட்டு தனது வாகனம் அருகில் வந்து எந்த எதிர்ப்பும் காட்டாமல் எடுக்க பார்க்கிறார்.

ஆனாலும் தாக்குதல் தொடர்கிறது. எஸ்.ஐ அதை வேடிக்கைப் பார்க்கிறார். பின்னர் அந்த மாணவர் வாகனத்தை எடுத்துச் செல்கிறார். இதை அங்குள்ள ஒருவர் தனது செல்போனில் ரகசியமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டுவிட்டார்.. அது வைரலானது.

இந்தச்செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரவியது. இந்த விவகாரம் காவல் உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்பட்டது. போலீஸ் ரோந்து வாகனம் கோட்டை காவல் நிலையத்தை சேர்ந்தது என தெரியவந்தது. ஜீப் ஓட்டுநர் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த மோகன் என்பதும், எஸ்.எஸ்.ஐ ஹரிபாபு என்பதும் தெரியவந்தது.

காவலர்களுக்கு மனவளப்பயிற்சி காவல் ஆணையர் உத்தரவின்பேரில் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. ஆனாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உடனடியாக சம்ந்தப்பட்ட காவலர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

police-attack-bike
police-attack-bike