பேட்ட, விஸ்வாசம் படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் பதிவிட்ட பதிவு.!

0
115

பேட்ட, விஸ்வாசம் படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் பதிவிட்ட பதிவு.!

பேட்ட vs விஸ்வாசம் பொங்கல் என்ற போட்டி சில நாட்களாகவே ஆரம்பித்து விட்டது. கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் உயிர்ப்பித்துளார். இயக்குனர் சிவாவோ கிராமத்து குசும்புடன் மகள் செண்டிமெண்ட், என அஜித்தை இயக்கியுள்ளார். இரண்டு ஹீரோக்குமே படத்தில் டூயல் கெட் அப் தான் ஓல்ட் அண்ட் யூத் லுக்.

viswasam
viswasam

இரண்டு படங்களுமே மாஸ் படங்களாக அமைந்து விட்டது. அணைத்து தரப்பிலும் நல்ல பாசிட்டிவ் விமர்சனமே வந்துள்ளது. சிவகார்த்திகேயன் இரண்டு படங்களையும் க்ரோம்பேட் வெற்றி தெயட்டரில் அடுத்தடுத்த ஷோ பார்த்துள்ளார்.

இப்படங்களை பற்றி தன ட்விட்டரில் கருதும் பதிவிட்டுள்ளார்.

தலைவர் பக்கா புல் மாசில் இறங்கிவிட்டார். ஸ்டைலிஷ், எனெர்ஜியான ரஜினியை நாம் திரையில் பார்க்கலாம். அனிருத் சார் பின்ணணி இசை வேற லெவல்.  தலைவர் கெத்து. கார்த்திக்சுப்புராஜ் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

தல ரவுண்ட் கட்டி அடிச்சிருக்காரு. கலாட்டா, செண்டிமெண்ட் என மொத்த பேக்கேஜ் இப்படம். இத்தகைய குடும்பப்பாங்கான பொழுதுபோக்கு படத்தை கொடுத்த இயக்குனர் சிவா, இமான் , நயன்தாராவுக்கு மற்றும் டீம் நபர்களுக்கு நன்றி.

ஆகமொத்தத்தில் சிவா தல – தலைவர் ரசிகன் என்பதை நிரூபித்து விட்டார்.