பேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்.!

0
158

பேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்.!

வரும் 10 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் பேட்ட, விஸ்வாசம் படத்தின் எதிர்பார்ப்பு இந்தியாவிலேயே எந்த நடிகர்களுக்கும் இல்லாத அளவுக்கு இருக்கிறது. ரஜினி, அஜித் அவர்களின் ரசிகர்கள் அப்படி இருக்கிறார்கள். விஸ்வாசம், பேட்ட படத்தின் சிறப்பு காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

petta

ஏனென்றால் சிறப்பு காட்சிகளில் வரும் ரசிகர்களின் கூட்டத்தை அடக்குவதற்கு போலீசும் தியேட்டர்காரர்களும் போராட வேண்டியிருக்கும். அதேநேரம் பொங்கலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ரிலீசாவதால் பத்தாம் தேதி வெளிவருவதே ஒரு சிறப்பு காட்சி போலதான் இருக்கிறது.

பேட்ட படத்தினை சென்சார் போர்டுக்கு அனுப்புகையில், சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தை பார்த்தனர். தீ படத்தில் பார்த்த ரஜினியும், தில்லு முல்லு படத்தில் பார்த்த ரஜினியும் ஒன்றாக இருப்பதுபோல் உள்ளதாகவும். படத்தில் ஆக்சன் காட்சிகளும் ஸ்டைல் காட்சிகளும் விசில் அடிக்க செய்வதாக இருக்கிறது என்றும் கூறினார்கள்.

மேலும் இந்த படம் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் சாயலில் முழுவதுமாக இருக்கிறது அதில் ரஜினி காம்பினேஷனை சேர்த்தால் எந்த அளவுக்கு இருக்கும் என்பது உங்களுக்கே பார்த்தால் புரியும் என கூறுகிறார்கள். எந்திரன் படத்தை விட பேட்ட படம்தான் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த படமாக இருக்குமாம்.