பேட்ட – மரணம் மாஸ் மரணம் இணையதளத்தில் தெறிக்கும் புதிய ப்ரோமோ வீடியோ.!

0
113

பேட்ட – மரணம் மாஸ் மரணம் இணையதளத்தில் தெறிக்கும் புதிய ப்ரோமோ வீடியோ.!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

petta
petta

ஜனவரி 10-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் இந்தப் படம் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி பேட்ட படக்குழுவினர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை மேலும் மேலும் அதிகப்படுத்தும் விதமாக, நாளுக்கு நாள் படங்கள் குறித்து ஏதேனும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது ‘பேட்ட’ படத்தின் புதிய புரோமோ ஒன்று வெளியிட்டுள்ளனர்.  இதில் அனிருத் , எஸ். பி. பி பாடி மெகா வைரலாக மாஸ் மரணம் பாடலிற்கு ரஜினிகாந்த் தனக்கே உரித்தான தனி ஸ்டைலில் நடனம் ஆடுகிறார். இந்த வீடியோ தற்போது பலரால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பு வெளியான ப்ரோமோ வீடியோவில் சூப்பர் ஸ்டார் இளமையான துள்ளலோடு சிம்ரனை சுற்றி சுற்றி வரும் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .