தோனி விளையாட போனாரா இல்லை போருக்கு போனாரா.! கடுப்பான அமைச்சர்

0
82

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது தனது கிளவுஸில் தோனி இந்திய ராணுவப் பிரிவின் முத்திரையைப் பொறித்திருந்தது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி கடுமையானக் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய போது, தோனி தனது கீப்பிங் கிளவ்ஸில் இந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் ”பாலிதான்” என்ற முத்திரை பதிக்கப்பட்டிருந்தது சர்ச்சைகளைக் கிளப்பியது.

தோனி 2015 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் பாராமிலிட்டரி பிரிவில் பயிற்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் இந்த முத்திரையை தனது கிளவுஸில் குத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து தோனி ரசிகர்களும் இந்திய ஊடகங்களும் இதைக் குறிப்பிட்டு தோனியின் நாட்டுப்பற்று எனப் புகழ்பாட ஆரம்பித்தன.

இதனால் கடுப்பான ஐசிசி, தோனியின் கிளவுஸில் இருக்கும் முத்திரை அகற்றப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. வீரர்களின் உடை , கிளவ்ஸ் மற்றும் பேட்களில் ஸ்பான்ஸர்களின் பெயர் மற்றும் முத்திரைகள் மட்டுமே இடம்பெற வேண்டுமென அறிவுறுத்தியது. மேலும் இது முதல் தவறு என்பதால் தோனிக்குத் தண்டனை எதுவும் வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

தோனியின் இந்த செய்கை குறித்து பாகிஸ்தானில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருக்கும் பவாத் சவுத்ரி ‘இங்கிலாந்துக்கு தோனி கிரிக்கெட் விளையாட சென்றுள்ளாரா? அல்லது மகாப்பாரதப் போருக்கு சென்றுள்ளாரா ? இந்த விஷயத்தை வைத்து இந்திய ஊடகங்கள் முட்டாள்தனமான விவாவத்தை உருவாக்கி வருகின்றன.

dhoni
dhoni

தோனியை ராணுவ வீரராக்கி சிரியா, ஆப்கானிஸ்தான் அல்லது ரவாண்டாவுக்கு அனுப்பி வையுங்கள்.. முட்டாள்கள்’ எனக் கடுமையாக சாடியுள்ளார்.