பாகிஸ்தான் வீரர் ஆஷிப் அலியின் மகள் மரணம்.! அதிர்ச்சியில் கிரிகெட் ரசிகர்கள்

0
69

ashif ali :பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஆஷிப் அலியின் மகள் புற்றுநோய் சிகி்ச்சையில் பலன் அளிக்காமல் இறந்ததையடுத்து அவர் உடனடியாக இங்கிலாந்தில் இருந்து புறப்படுகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆஷிப் அலியின் சிறுவயது மகள் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தார், அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வயதான வீரர் ஆஷிப் அலி, உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெறாத நிலையிலும், இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரில் இடம் பெற்றிருந்தார். ஹெட்டிங்லியில் நடந்த கடைசி ஒருநாள் ஆட்டத்தில் கூட ஆஷிப் அலி 54 ரன்கள் விளாசினார். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் ஆஷிப் அலி 2 அரைசதங்களை அடித்து நல்ல ஃபார்மில் இருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த ஆஷிப் அலியின் மகள் திடீரென இறந்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து, கடந்த மாதம் 24-ம்தேதி புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தனது மகளை ஆஷிப் அலி சேர்த்திருப்பதாக ட்வீட் செய்திருந்தார். இந்த செய்தியால் உடனடியாக இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் ஆஷிப் அலி விளையாடி வந்தார். அந்த அணி ட்விட்டரில் கூறுகையில் ” இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஆழ்ந்த வருத்தங்களை ஆஷிப் அலிக்கு தெரிவிக்கிறது. தனது மகளை இழந்து வாடும் ஆஷிப் அலிக்கு வருத்தத்தை தெரிவிக்கிறோம். வலிமைக்கும், துணிச்சலுக்கு சிறந்த உதாரணமாக ஆஷிப் அலி இருந்தார், அனைவருக்கும் தூண்டுகோலாக இருந்தவர் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஷிப் அலியின் மகள் உடல்நலம் இல்லாமல் இருப்பதை அறிந்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் பயிற்சியாளர் டீன் ஜோன்ஸ் ஆஷிப் மகளைச் சந்தித்து பேசியபோது, திடீரென உடைந்து அழுது கண்ணீர் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆஷிப் அலி ட்விட்டரில் கூறுகையில், ” என்னுடைய மகள் 4-வது வகை புற்றுநோயால் பீடிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனது மகள் இறந்த செய்தி அறிந்ததும், எனக்கு ஒருமணிநேரத்தில் இஸ்லாமாபாத் செல்ல விசா வழங்கிய அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு நன்றி தெரிவிக்கிறேன். என் இளவரசிக்காக இறைவனிடம் பிராத்தியுங்கள்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.