அதிரடியாக விலை குறைந்தது ஓப்போ மொபைல்.! எவ்வளவு தெரியுமா

0
135

ஸ்மார்ட்போன்கள மீதான சலுகைகளும் தள்ளுபடிகளும் அதிகரித்து வரும் நிலையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன் மீதான விலையை வெளியான சில மாதங்கள் கழித்து குறைக்கின்றது.

அந்த வகையில், ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்திருக்கிறது. ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ராம் மற்றும் 3 ஜிபி ராம் ஆகிய இரு வேரியண்ட்டிற்கும் இந்த விலை குறைப்பு பொருந்தும்.

முன்னதாக ஒப்போ ஏ3எஸ் 2 ஜிபி ராம் விலை ரூ.10,990 ஆக இருந்த நிலையில், தற்போது விலை குறைப்புக்கு பின் ரூ.7,990 ஆகவும், 3 ஜிபி ராம், விலை ரூ.13,990 ஆக இருந்த நிலையில், தற்போது விலை குறைப்புக்கு பின் ரூ.9,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ3எஸ் சிறப்பம்சங்கள்:

# 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், # 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் , # 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா
# டூயல் சிம் ஸ்லாட், 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி