இணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி

0
84

இணையத்தில் கசிந்த சூர்யாவின் ‘என்.ஜி.கே’ – படக்குழு அதிர்ச்சி

செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யாஎன்.ஜி.கே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கிறது. எப்போது திரைக்கு வரும் என்று தெரியவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

ngk
ngk

செல்வராகவனை தினமும் ரசிகர்கள் படம் எப்ப வரும் என கேள்வி எழுப்பி நச்சரித்து வருகிறார்கள். இதனால் கடுப்பான செல்வராகவன், வரும் போது வரும் என ரசிகர்களிடம் எரிஞ்சு விழுந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு என்.ஜி.கே படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. சூர்யா, ரகுல் பிரீத் சிங் நடிக்கும் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டு வருகின்றன.

படப்பிடிப்பை காண குவிந்த ரசிகர்களில் குவிந்த ரசிகர்களில் ஒருவர், படப்பிடிப்பு காட்சிகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டார். அந்த காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவியது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியாகி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், “ரசிகர்கள் அனைவரும் சூர்யாவின் என்.ஜி.கே படம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பது புரிகிறது. அவற்றை வெளியிட தயார் செய்து கொண்டு இருக்கிறோம். படம் வெளியாவது வரை உங்கள் ஆர்வத்தை கட்டுப்படுத்துங்கள், பட காட்சிகளை கசிய விடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.