NGK வெளியாவதில் சிக்கல்.? செல்வராகவன் மீது கடுப்பில் சூர்யா.!

0
101

NGK வெளியாவதில் சிக்கல்.? செல்வராகவன் மீது கடுப்பில் சூர்யா.!

என்.ஜி.கே செல்வராகவன், இயக்கத்தில் சூர்யா நடித்துக்கொண்டிருக்கும் படம் தான். இந்தப் படம் தமிழ் புத்தாண்டுக்கு வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படத்தின் அப்டேட் எதுவுமே சரியான முறையில் இல்லாததற்கு குழப்பத்திற்கும் ஒரு முக்கிய காரணம் இயக்குனர் செல்வராகவன் என்று குறிப்பிடுகின்றனர். கதை இன்னும் சரியான முறையில் அமைக்க வில்லை என்று சூர்யா மிகவும் கோபத்தில் உள்ளாராம்.

NGK-Second-Look
NGK-Second-Look

இயக்குனர் செல்வராகவனை நான் சந்திக்க விரும்பவில்லை என்றும் ஸ்கிரிப்டை தெளிவாக எழுதி கொடுக்க வேண்டும் என்றும், ஹீரோ மற்றும் இயக்குனர்களின் அசிஸ்டன்ட் பேசி கொண்டு இனி முடிவு செய்து கொள்வார்கள் என்றும் சூர்யா தரப்பில் கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது இயக்குனர் செல்வராகவன் மீது சூர்யா கடுப்பில் உள்ளதாக தெரிகிறது.

இயக்குனர் செல்வராகவனை பற்றி தனுஷ் கூறும்போது என்னை உருவாக்குவதே என் அண்ணன் தான் என்று கூறுவார் ஆனால் இப்போது கால்சீட் கொடுப்பது இல்லையாம். காரணம் அவர் மேலுள்ள அவநம்பிக்கையா இல்லை குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளா என்று தெரியவில்லை. தனக்கு செல்வராகவன் மூலம் வந்த கால்சீட்டை கூட சிம்புவிற்கு திருப்பி விட்டதாக கூறப்படுகிறது.