புதிதாக வாங்கிய செல் ஃபோனை தீயிட்டு கொளுத்திய நபர்.! காரணம் என்ன தெரியுமா.?

0
70

mobile : சென்னையில் புதிய சொல்போனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விரக்தி அடைந்த நபர், அதை வாங்கிய கடையின் முன்பு தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cellphone
cellphone

இன்று காலை சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல செல்போன் கடைக்கு முன்பு வந்த ஒரு நபர், ஒரு புதிய செல்போனை தரையில் வைத்து தீ வைத்து கொளுத்தினார். இதையடுத்து அங்கே பொதுமக்கள் ஒன்று கூடினர். அதன்பின் போலீசார் அங்கு வந்த அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில், அந்த நபர் சமீபத்தில் அந்த கடையில் ரூ.14 ஆயிரம் மதிப்புடைய ஒரு புதிய செல்போனை வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய ஒரு சில நாட்களிலேயே அதில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே, செல்போன் கடைக்கு வந்து முறையிட்டுள்ளார். அவர்கள் சர்வீஸ் செண்டருக்கு செல்லுங்கள் எனக்கூறிவிட்டனர். ஆனால், அங்கேயும் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

cellphone
cellphone

இந்நிலையில், இன்று மீண்டும் அந்த செல்போன் கடைக்கு வந்த நபர் இதுபற்றி புகார் செய்தார். ஆனால், நாங்கள் செல்போன் விற்பனை மட்டுமே செய்கிறோம். சர்வீஸ் செண்டரைத்தான் நீங்கள் அணுக வேண்டும் எனக்கூறியுள்ளார். இதில் கோபமடைந்த அவர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் கடையின் வெளியே வந்த புதிய செல்போனை தீயிட்டு கொளுத்தியது தெரியவந்துள்ளது.