மகிழ்ச்சியில் நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர்.! காரணம் என்ன தெரியுமா.?

0
178

boney kapoor : விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

MOM
MOM

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இவரது தயாரிப்பில் இவருடைய ஸ்ரீதேவி கடைசியாக நடித்த மாம் திரைப்படம் கடந்த வாரம் சீனாவில் வெளியானது.

சீனாவில் 38,500 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல்நாளிலேயே 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். இதனால் தயாரிப்பாளர் போனி கபூர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.