மீண்டும் நயன்தாராவின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.!

0
131

தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடிகள் என்றால் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தான், இவர்கள் காதலிப்பது மட்டுமில்லாமல் அடிக்கடி சுற்றுலா சென்று தங்களது ரொமான்ஸ் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த ஜோடிகள் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்கிறார்கள் என சமீபத்தில் கிசுகிசுப்பு பரவியது, இந்த ஜோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு டேட்டிங் செல்வார்கள் அந்த வகையில் தற்போது காதல் ஜோடிகளின் முக்கிய சுற்றுலாத்தளமாக பார்க்கப்படும் சாண்டோரினி நகரில் இருவரும் ஜோடியாக வலம் வருகின்றனர். இந்த நகரம் புதுத்தம்பதிகள் ஹனிமூன் செல்லும் முக்கிய நகரமாக இருந்து வருகிறது.

இளசுகளின் கனவு கன்னியான நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் சேர்ந்து ஊரசுற்றும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் கடுப்பாகி கண்டபடி அவரை கரித்துக்கொட்டிய நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

nayanthara vignesh
nayanthara vignesh

மேலும் ஏற்கனவே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இவர்கள் தற்போது மற்றொரு புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்கள்…