பாண்டவர் அணியை எதிர்த்து போட்டியிடும் பிரபல இயக்குனர்.! களைகட்டும் நடிகர் சங்க தேத்தல்

0
70

Nadigar sangam Election – தற்போது தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக நாசர், துணைத்தலைவராக கருணாஸ், பொருளாளராக நடிகர் கார்த்தி மற்றும் பொதுச் செயலாளராக நடிகர் விஷாலும் பதவி வகித்து வருகின்றனர். அவர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதால் தற்போது மீண்டும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

வருகிற ஜூன் 23ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறையும் தலைவர் பதவிக்கு நாசரும், துணை தலைவர் பதவிக்கு கருணாஸும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் போட்டியிடவுள்ளனர். இவர்களின் எதிரணியில் தலைவர் பதவிக்கு ராதிகா போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் நாசரை எதிர்த்து போட்டியிட இருப்பதாக பாக்கியராஜ் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடைபெறவுள்ளது.

bhagyaraj