வாவ் செம்ம ஐடியா சமூக வலைதளத்தில் லைக்ஸ் குவிக்கும் நாம் தமிழர்.! இதை பார்த்தல் நீங்களும் பாராட்டுவீர்கள்

0
50

கோடைக் காலம் ஆரம்பித்தது முதல் மக்களுக்கு குடிக்கவோ மற்ற அன்றாடத் தேவைகளுக்கோ தண்ணீர் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. குடிக்கும் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் அவலத்தை அடுத்து இப்போது குளிக்கும் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கும் அவலம் அரங்கேறி வருகிறது.

கிராமத்தை விட நகரத்தில் வசிக்கும் மக்களே தண்ணீர் பஞ்சத்தால் அதிகமாக அவதிப்பட்டு வருகின்றன. மனிதர்களுக்கே இந்த நிலைமை என்றால் நகரங்களில் இருக்கும் கால்நடைகளின் நிலைமையைப் பற்றி சொல்லவா வேண்டும் ?

அந்த கால்நடைகளின் தாகத்தை தீர்க்க நாம் தமிழர் கட்சியினர் ஒரு சிறப்பான ஏற்பாட்டை செய்துள்ளனர். நகரங்களின் சில பகுதிகளில் கால்நடைகள் குடிக்கும் வண்ணம் தண்ணீர் தொட்டிகளை வைத்து, அதில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். அந்த தொட்டிகளில் ’நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்குமானது’ என எழுதப்பட்டுள்ளது.

அதில் கால்நடைகள் வந்து தண்ணீர் குடித்து தாகம் தீர்க்கும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.

இந்த தண்ணீர் தொட்டி முன்னெடுப்பு முக்கியமான முன்னெடுப்பு எனவும், இது வெறும் அடையாள தண்ணீர் பந்தலாக இல்லாமல் இது நிரந்தரமாக தொடரவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் இந்த முன்னெடுப்பு முக்கியமானது என பலரும் தங்கள் கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.