திடீரென திருமணம் செய்துகொண்ட மூடர் கூடம் நடிகர் நவீன்.! புகைப்படத்தை பார்த்து வாழ்த்து கூறும் ரசிகர்கள்

0
115

naveen : தமிழில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு பெயரை பெற்ற படங்களில் மூடர் கூடமும் ஒன்று, இப்படத்தில் நடிகராக, ஒரு இயக்குனராக நவீன் நடித்திருப்பார்.

குறிப்பாக இப்படத்தில் செண்ட்ராயன், தமிழ் தெரியாத இங்கிலீஸ்காரன் கிட்ட தமிழ் பேசக் கூடாது என்று தெரிஞ்ச உனக்கு, இங்கிலீஷ் தெரியாத பச்சை தமிழன் கிட்ட இங்கிலீஷ் பேசக்கூடாதுனு ஏன் டா தெரியாம போச்சு என்று பேசுவார், அந்த வசனம் சமூகவலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.அதில், எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார் என கூறியுள்ளார்.