Avengers Endgame படத்திற்கு விஜய் சேதுபதி வாய்ஸ் வேணாம் தெறிக்கும் மீம்ஸ்.!

0
126

Avengers Endgame படத்திற்கு விஜய் சேதுபதி வாய்ஸ் வேணாம் தெறிக்கும் மீம்ஸ்.!

Vijay sethupathi on Avengers Endgame – விரைவில் வெளியாகவுள்ள அவெஞ்சர்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரமான டோனி ஸ்டார்க்குக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

memes
memes

ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் மேன் படங்களுக்கு குறிப்பிட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்த படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெளியிடப்படுகிறது. தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் வருகிற 26ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

memes
memes

தமிழில் இப்படத்திற்கு இயக்குனர் முருகதாஸ் வசனம் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அயன்மேனுக்கு நடிகர் விஜய்சேதுபதி டப்பிங் பேசியுள்ளார். விஜய்சேதுபதி குரலில் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. அதேபோல், பிளாக் விடோவிற்கு நடிகை ஆண்ட்ரியா டப்பிங் பேசியுள்ளார்.

இந்நிலையில், அயன்மேன் கதாபாத்திரமன டோனி ஸ்டார்க்குக்கு விஜய் சேதுபதியின் குரல் பொருத்தமாக இருக்காது என டிவிட்டரில் பலரும் கருத்துக்கூறி வருகின்றனர். இதுபற்றி கிண்டலடித்து மீம்ஸ்களையும் பதிவு செய்து வருகின்றனர்.