முரட்டுத்தனமாக பந்துவீசும் பும்ரா மீது ஊக்க மருந்து சோதனை.!

0
106

இந்திய அணியில் தவிர்க்கமுடியாத பந்துவீச்சாளர் என்றால் பும்ரா தான், இவர் இந்திய அணியில் இல்லாவிட்டால் இந்திய அணி பந்துவீச்சில் மோசமான நிலையை அடைந்து விடும் அந்தளவிற்கு இவரின் பந்துவீச்சு இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

கடைசி ஓவரில் யக்கர்கள் வீசுவது இவரின் தனிச்சிறப்பு ஆகும், அதுமட்டுமில்லாமல் தற்போது ஐசிசி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவரும் இவரே, இவர் மிகவும் முரட்டுத்தனமாக பந்து வீசுவதால் இவர் மீது ஊக்க மருந்து பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதனால் இவர் மீது தற்பொழுது மருந்து பரிசோதனையை செய்து வருகிறார்கள், முதலில் சிறுநீரகப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் அதன் பிறகு 45 நிமிடம் கழித்து இரத்தப் பரிசோதனை செய்யப்படும், இந்த பரிசோதனைகள் அனைத்தும் இவர் ஊக்கமருந்து பயன்படுத்தினாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்கவே. இவ்வாறு ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தால் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.