இந்த விலை குறைந்த மீனை சாப்பிட்டால் எல்லா நோய்களும் தெறித்து ஓடிவிடும்.!

0
37

இந்த விலை குறைந்த மீனை சாப்பிட்டால் எல்லா நோய்களும் தெறித்து ஓடிவிடும்.!

மீன்களில் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது நெத்திலி மீனும், மத்தி மீனும் தான். இதன் விலை குறைவு என்பதற்காக இதன் சுவையில் குறைவு இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.

nethili fish
nethili fish

இது சுவையில் அலாதியானது ஆகும். இந்த பகுதியில் நெத்திலி மீன் மற்றும் மத்தி மீன்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றியும் தரமான மீனை எப்படி தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது பற்றியும் காணலாம்.

இதய ஆரோக்கியம்

நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

செல்லுலார் பழுது

செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும், இந்த திசுக்களில் உள்ள கோளாறுகளை சரி செய்யவும் தேவையான அளவு புரோட்டீன் நெத்திலி மீனில் உள்ளது.

சரும ஆரோக்கியம்

நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன. எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும்.

பற்கள் மற்றும் எலும்புகள்

நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து. அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

உடல் எடை குறைய

நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.

சர்க்கரை நோய்க்கு…

சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது.

மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

தரமான மீனை தேர்ந்தெடுப்பது எப்படி?

கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும். செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும். மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது. மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும். தசைப்பகுதி உறுதியாக இருக்கும். கடல் பாசி மனம் இருக்கும்.
எப்படி சாப்பிடலாம்?

கேரளாவில் இதன் பயன்பாடு அதிகம். அங்கே இதை சாளை என்பார்கள். தமிழகத்து மத்திமீனைவிட கேரளாவின் மத்திமீன் ருசியில், சதையில், மணத்தில், மருத்துவக்குணத்தில் தலைசிறந்தது. ஆனாலும், எக்காலத்திலும் ஏழைகளின் உணவு இதுவே.

காரணம் விலை குறைவாக கிடைக்கும் என்பதே. இந்த மீனை மாங்காய்போட்டு குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவை மிக அருமையாக இருக்கும். அந்தக்குழம்பை மறுநாள் சுண்டவைத்து சாப்பிட்டால் சொர்க்த்தில் இருப்பது போன்ற அனுபவம் கிடைக்கும்.