தண்ணீர் தட்டுபாடு பல ஹோட்டலில் மதிய உணவு நிறுத்தும் அபாயம்.!

0
22

Chennai Hotels – பெருகி வரும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் மதிய உணவை நிறுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகமெங்கும் தண்ணீர் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கிறது. சென்னைக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரிகள் வறண்டு விட்டதோடு, மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீரும் வற்றிவிட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை மகாபலிபுரம் சாலையில் உள்ள பல ஃசாப்ட்வேர் நிறுவனங்கள் தண்ணீர் இல்லாதால் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு கூறிவிட்டது. அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையில் உள்ள ஹோட்டலில் மதிய உணவை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சென்னை ஓட்டல் சங்க தலைவர் கூறியுள்ளார். காலை, இரவு உணவை விட மதிய உணவான சாப்பாடு, சாம்பார், ரசம், பொறியல் ஆகியவற்றிற்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதால் அதை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், வெளியூரிலிருந்து சென்னை செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என கருதப்படுகிறது.