உஷாரய்யா உஷார்..! மாம்பழம் சாப்பிட்டால் அவ்வளோதான் அதிர்ச்சி தகவல்.!

0
83

mango : செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒரு டன் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள். தமிழகம் முழுவதும் மாம்பழ சீசன் ஜோராக கொடிகட்டி பறக்கிறது.

இந்நிலையில் விழுப்புரம் பகுதியில், அதிகமாக எத்திலின் ஸ்பிரே பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார்கள் வந்தன.

mango
mango

வந்த புகார் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தட்சணாமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன், ஸ்டாலின் ராஜரத்தினம், முருகன், சமரேசன், அன்புபழனி ஆகியோர் விழுப்புரம் எம்.ஜி.ரோட்டில் உள்ளபழக்கடைகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

அதில், விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக எத்திலின் ஸ்பிரே பயன்படுத்தி பழுக்க வைத்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

mango
mango

எத்திலினால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் சாப்பிட்டால் பல உடல்நல கோளாறுகள் வருவதால் தமிழகம் முழுவதும் இந்த நடவடிக்கையை உணவுபாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.