மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இப்படி ஒரு மவுசா.! செம்ம மாஸ் தான்

0
108

makkal needhi maiam : நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் நேரடியாக யாருடைய கூட்டணியும் இன்றி களம் கண்டன.

தமிழகத்தில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, சேலம், மதுரை, திருவள்ளூர் ஆகிய 11மக்களவை தொகுதிகளிலும் புதுவை யூனியன் பிரதேச மக்களவை தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

4-ஆம் இடத்தில் நாம் தமிழர் கட்சியும் கடைசி இடத்தில் அமமுகவும் இடம் பெற்றுள்ளது. 20 இடங்களில் அமமுக 3-ஆவது இடத்தையும் 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி 3-ஆவது இடத்தையும் 12 இடங்களில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. அக்கட்சிக்கு ஓட்டே கிடைக்காது என அதிமுக கருதியது. ஆனால் வாக்குகளை அக்கட்சிதான் பிரித்தது.

மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக ஆகிய 3 கட்சிகளும் இந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. இவை மூன்றும் பல்வேறு தொகுதிகளில் 3-இடத்தில் உள்ளது. தேர்தலுக்கு பிறகு இந்த 3 கட்சிகளும் புதிய சக்திகளாக விளங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

தேசிய கட்சியான பாஜக செய்யாத காரியத்தை இந்த மூன்று கட்சிகளும் செய்துள்ளது. எதிர்காலத்தில் நிச்சயம் இந்த கட்சிகளின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.