நடிகராக அவதாரம் எடுக்கும் மெட்ராஸ் பட ஜானி.!

0
61

Madras Movie Johnny – மெட்ராஸ் படத்தில் ஜானியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ஹரி கிருஷ்ணன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான படம் மெட்ராஸ். இப்படத்தில் வடசென்னையில் வாழும் மனநலமில்லாத மனிதராகவும், ஆங்கிலத்தை கத்தி கத்தி பேசும் ஜானி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹரி கிருஷ்ணன். அதன் பின் இவர் கபாலி, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

தற்போது அவர் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை பிரபல பாடலாசிரியர் குட்டி ரேவதி இயக்கியுள்ளார். சாலை பயணத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ‘சிறகு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அக்‌ஷிதா நடித்துள்ளார். மற்றும் காளி வெங்கட், நிவாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.