வெளியானது ‘மாரி 2’ படத்தின் சாய் பல்லவி கேரக்டர் போஸ்டர்

0
130

வெளியானது ‘மாரி 2’ படத்தின் சாய் பல்லவி கேரக்டர் போஸ்டர்

2015-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி’. பாலாஜி மோகன் இயக்கியிருந்த இப்படம் மாஸ் ஹிட்டானது. இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். தற்போது, மீண்டும் தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணி ‘மாரி 2′-விற்காக கைகோர்த்துள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ புகழ் சாய் பல்லவி டூயட் பாடி ஆடியுள்ளார்.

maari 2
maari 2

கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு வில்லன் கதாபாத்திரமாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

சமீபத்தில், இதன் 2 போஸ்டர்ஸ் வெளியிடப்பட்டது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சாய் பல்லவியின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த கேரக்டர் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.