டானுக்கே ஆப்படித்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ – அதிர்ச்சியில் ‘மாரி 2’ டீம்

0
119

டானுக்கே ஆப்படித்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ – அதிர்ச்சியில் ‘மாரி 2’ டீம்

2015-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி’. பாலாஜி மோகன் இயக்கியிருந்த இப்படம் மாஸ் ஹிட்டானது. தற்போது, மீண்டும் தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணியில் இதன் 2-ஆம் பாகமான ‘மாரி 2′ நேற்று (டிசம்பர் 21-ஆம் தேதி) ரிலீஸானது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ புகழ் சாய் பல்லவி டூயட் பாடி ஆடியுள்ளார்.

maari 2
maari 2

கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு வில்லன் கதாபாத்திரமாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். இந்த படம் தனுஷ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் ‘தமிழ்ராக்கர்ஸ்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.