அடேய் இதுல எங்கடா சென்னை இருக்கு.! மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்

0
63

M.G.Ramachandra railway station – சென்னை செண்ட்ரல் ரயில்வே நிலையம் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர் ரயில்வே நிலையம் என பெயர் மாற்றப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதன் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.

ஆனால், அந்த பெயர் பலகையின் எந்த இடத்திலும் சென்னை என்கிற பெயர் பொறிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து சென்னை எங்கடா? என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

M.G.Ramachandra railway station
M.G.Ramachandra railway station