முதல் சந்திப்பிலேயே உங்கள் காதலியை உஷார் செய்வது எப்படி? காதலர் தின டிப்ஸ்!

0
71

முதல் சந்திப்பிலேயே உங்கள் காதலியை உஷார் செய்வது எப்படி?

இன்னும் ஓரிரு நாட்களில் காதலர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொட்டப்பட்ட இருக்கிறது. தங்கள் மனதிற்கு பிடித்தவர்கள், தாங்கள் விரும்பும் பெண் அல்லது ஆண் நண்பருக்கு பிடித்த பரிசு பொருட்களை வாங்கி தருவது, காதலை தெரிவிப்பது என அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

புதிதாக காதலை தெரிவிக்கப்போகும் நபர்களுக்கு சில ஈஸியான டிப்ஸ்.
பொதுவாக பெண்கள் அனைத்தையும் கவனமாக பார்க்க கூடியவர்கள். முதல் முறை அவர்களை பார்க்க செல்லும் போது நீங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

1. ஆடையின் கலர்

நீங்கள் பார்மலான சட்டை அணிந்து செல்கிறீர்களோ அல்லது டி சர்ட் அணிந்து செல்கிறீர்களா என்பது அவசியம் அல்ல. அதன் நிறம் அவர்களின் மனதை கவர்ந்த நிறமா என்பது தான் முக்கியம். எனவே அவருக்கு பிடித்த நிறத்தில் அல்லது கருப்பு, மெரூன், பச்சை ஷேடுகளில் ஆடை அணிந்து செல்லுங்கள்.

2. தலைமுடி

பெண்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களது தலைமுடியை கவனிப்பார்கள், எனவே உங்களது தலைமுடியை நன்றாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

3. உடல் அசைவு

பெண்கள் முதலில் அதிகமாக கவனிப்பது இதை தான். நீங்கள் அவரது முன் எப்படி அமருகிறீர்கள். எப்படி பேசுகிறீர்கள் என்பதை தான் அதிகமாக கவனிப்பார்கள். எனவே நீங்கள் நாகரீகமான முறையில் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.

Beautiful Eyes
Beautiful Eyes

4. நம்பிக்கை

நீங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கைகுரியவராக நடந்துகொள்கிறீர்கள், அவர்கள் உங்களுடன் இருக்கும் போது எந்த அளவுக்கு பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை எல்லாம் கவனிப்பார்கள்.

5. காலணி

மேலே கூறிய அனைத்தையும் கவனித்த பிறகு, பெண்கள் உங்களது ஷூக்களை தான் பார்ப்பார்கள். அது சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே நன்றாக பாலிஷ் செய்த ஷூக்களை அணிந்து செல்லுங்கள்.

6. கண்கள்

பெண்கள் கண்களை பார்த்தே அனைத்தையும் கண்டு பிடித்துவிடுவார்கள். நீங்கள் எங்கே பார்த்து பேசுகிறீர்கள், உங்கள் உண்மையாக தான் பேசுகிறீர்களா, உங்களது நோக்கம் என்ன என்பதை எல்லாம் கண்களை பார்த்தே பெண்களால் கண்டுபிடித்து விட முடியும்.

7. உங்களது பதில்கள்

நீங்கள் அந்த பெண்ணுக்கோ அல்லது உங்களை சுற்றி உள்ளவர்களின் கேள்விகளுக்கோ எப்படி விடையளிக்கிறீர்கள் என்பதை வைத்தே பெண்கள் உங்களது குணத்தை எடை போட்டுவிடுவார்கள். அவர்களது பார்வையில் இருந்து எதுவும் தப்பிக்க முடியாது.

8. நகைச்சுவை

பெண்கள் ஆண்களிடம் அதிகம் விரும்புவது அவர்களிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வை தான். உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா என்பதை அவர்கள் கண்காணிப்பார்கள்.

men
men

9. உங்களது கைகள்

பெண்கள் உங்களது கைகளை கவனிப்பார்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியாது தான். ஆனால் நீங்கள் அவர்களுக்காக நாற்காலிகளை தருவது, கைகளின் அசைவுகள் போன்றவற்றை கண்காணித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

10. சிரிப்பு

இவை அனைத்தையும் பார்த்து உங்களை ஓரளவுக்கு எடை போட்டிருப்பார்கள். இறுதியாக உங்களது சிரிப்பை தான் அவர்கள் பார்ப்பார்கள். ஒரு நேர்த்தியான வரவேற்கும் சிரிப்பு மட்டும் போதும் அவர்களை கவர.. நீங்கள் விழுந்து விழுந்து சிரிப்பது, ஏளனமாக சிரிப்பது இவை எல்லாம் முதல் சந்திப்பில் வேண்டாமே!