லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்

0
209

ஹரஹர மகா தேவி படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் தற்பொழுது இளைஞர்களுக்காக மட்டும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தை இயக்கி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, இந்த திரைப்படத்திற்கு பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Iruttu-Arayil-Murattu-Kuththu_tamil360newz
Iruttu-Arayil-Murattu-Kuththu_tamil360newz

லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் திரைக்கு வந்த இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை செம்ம திட்டு திட்டினார். இதெல்லாம் ஒரு படமா கலாச்சார சீரழிவு, இந்த இயக்குனரை எல்லாம் படமே எடுக்கவிட கூடாது என்றார், இந்த நிலையில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து இயக்குனர் சந்தோஷ் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

இதில் ‘என்னை திட்டுகிறீர்கள் சரி, போலிஸ், நீதிமன்றம் இருக்கும் போது நீங்கள் யார் டிவியில் பஞ்சயாத்து பண்ணுவது, இந்த அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது’ என கேள்விகளை எழுப்பி, பதிலடி கொடுத்துள்ளார்.