கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி சிக்கியது எப்படி.?

0
104

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி சிக்கியது எப்படி.?

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ் குமார் சிக்கியது எப்படி என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி காணாமல் போன சிறுமி, மறுநாள் வீட்டின் அருகிலேயே சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்ப வம் தொடர்பாக, 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சிறுமியை கொலை செய்ததாக சந்தோஷ்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள தாத்தா வீட்டிற்கு சந்தோஷ்குமார் அடிக்கடி வந்து சென்றது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தோஷ்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், சிறுமி சத்தம்போட்டதால் பதற்றமடைந்த அவர், கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வும் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை நடந்த அன்றைய தினமே, எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமாரின் பாட்டியும் உயிரிழந்துள்ளார். அதனால் தனது டி- சர்ட்டை பயன் படுத்தி சிறுமியின் சடலத்தை மறைத்த அவர், அதனை வீட்டின் மூலையில் மறைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. சிறுமி சடலமாக கிடந்த இடத்தில் கிடந்த டி-சர்ட்டை வைத்துதான் போலீசார் சந்தோஷ்குமார் மீது சந்தேகமடைந்துள்ளனர். பின்னர் அவரை கைது செய்து விசாரித்த போது ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த கொலையில் இன்னும் சிலருக்கும் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று சிறுமியின் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்நிலை யில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ் குமாரை வரும் 15 ஆம் தேதி வரை காவலில் அடைக்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.