உலகக்கோப்பை தொடரில் இடம் பிடிக்கும் ராகுல், ரி‌ஷப் பன்ட்

0
51

உலகக்கோப்பை தொடரில் இடம் பிடிக்கும் ராகுல், ரி‌ஷப் பன்ட் | Virat, KL Rahul, Pant

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது.

kl rahul
kl rahul

விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்னே எடுக்க முடிந்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் கடைசி பந்தில் அந்த அணி வெற்றி பெற்றது.

தோல்வி குறித்து விராட் எங்களது பேட்டிங் சிறப்பாக இல்லை. ஆட்டத்தின் 15-வது ஓவர் வரை இந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய ஏதுவாகவே இருந்தது. ஆனால் உண்மையில் நாங்கள் பேட்டிங்கில் நன்றாக ஆடவில்லை. லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடினார். அவரும், நானும் சிறந்த பார்ட்னர் ஷிப் அமைத்தோம்.

rishabh-pant
rishabh-pant

126 ரன் என்பது போதுமான ஸ்கோர் இல்லை. நாங்கள் 150 ரன்னுக்கு மேல் எடுத்து இருக்கலாம். அப்படி எடுத்து இருந்தால் வெற்றிக்கான ஸ்கோராக இருந்து இருக்கும்.

எங்களது பந்துவீச்சு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. 19-வது ஓவர் வரை நாங்களே நல்ல நிலையில் இருந்தோம். பும்ரா ஆச்சரியம் அளிக்கும் வகையில் அபாரமாக பந்துவீசினார். உலககோப்பைக்கு முன்பு ராகுல், ரி‌ஷப் பந்துக்கு மேலும் கால அவகாசம் கொடுக்க விரும்புகிறார்.

இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.