நன்னாரி வேரை இப்படி பயன் படுத்துங்கள்.! சிறுநீரக நோய்கள் தெறித்து ஓடிவிடும்.!

0
59

kidney health tips : தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து இடங்களிலும், தானே வளரும் ஒரு கொடி வகை மருத்துவ மூலிகைத் தாவரம், கிருஷ்ணவல்லி, பாதாள மூலி எனும் பெயரில் அழைக்கப்படும் நன்னாரி.

எதிர் எதிர் அடுக்குகளில் நீண்டு காணப்படும் இலைகளுடன் பசுமை நிற மலர்களைக் கொண்டு, மெலிதான தண்டுப் பகுதியுடன்தோன்றினாலும், நன்னாரி வேர் அதிக உறுதி மிக்கது, நறுமண மிக்க நன்னாரி வேரே, நன்னாரியின் சிறப்புக்கு முக்கிய காரணமாகிறது.

வேரில் மகத்துவ மிக்க ஆற்றலைக் கொண்டு விளங்கும் நன்னாரி, தற்காலங்களில், அதன் மருத்துவ தன்மைக்காக, பரவலாகப் பயிரிடப்பட்டு வருகிறது. உள்நாட்டு மருந்து உற்பத்தியிலும், வெளிநாட்டு மருந்து உற்பத்திக்காக, அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

இனிப்புடன் சிறிதளவு கசக்கும் சுவையுடைய நன்னாரி வேர், குளிர்ச்சியானது, உடல் வெப்பத்தை அகற்றி, உடலை உறுதிப்படுத்தும், வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் இயல்பு மிக்கது.

உடல் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையுள்ள நன்னாரி வேரில் இருந்து எடுக்கப்படும் சாறு, சிறுநீரைப் பெருக்கும், வேர்வை சுரப்பை அதிகரிக்கும், சரும பாதிப்புகளைத் தீர்க்கும், மூட்டுவலி உடல் வெப்பம் தணிக்கும் மருந்தாக பயன் தருகிறது. வாத, பித்த பால்வினை வியாதிகளைப் போக்கும் மற்றும் மைக்ரேன் எனும்ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த மருந்தாகிறது.

பொதுவாக வயல் வெளி, ஆற்றங்கரையோரம், சம வெளிப் பகுதிகள் போன்ற இடங்களில் காணப்பட்டாலும், கடற்கரையோரம் மற்றும் மலைப்பகுதிகளில் வளரும் நன்னாரியின் வேர்கள் மிகவும் தடிமனாக, பெரிய அளவில், உறுதி மிக்கதாகக் காணப்படும்.

நறுமண மிக்க மருத்துவத் தன்மையுள்ள உலர்ந்த நிலையில் உள்ள நன்னாரி வேர்கள், நன்னாரி வேர்ப் பட்டைகள், இலை சூரணம் போன்றவை, சித்த மருந்துகள் விற்பனையாகும் கடைகளில் கிடைக்கும்.

நன்னாரியின் இலை, பட்டை மற்றும் வேர்கள் அதிக அளவில் மருத்துவ பயன்கள் மிக்கவை. இலை மற்றும் வேர்களில் இருந்து, எண்ணைகள் தயாரிக்கப்படுகின்றன. பல சித்த மருத்துவ தைலங்களில், இலேகியங்களில் துணை மருந்தாகவும் மணமூட்டியாகவும் நன்னாரி வேர் சேர்க்கப்படுகிறது.

சிறு நீரக பாதிப்புகளை போக்க

நன்னாரி வேரைப் பொடியாக்கி, அதை பாலில் சிறிது சேர்த்து கலக்கி பருகி வர, சிறுநீர் பிரியாமல் வேதனை ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் வறட்டு இருமல் தொல்லை விலகும். இதையே தொடர்ந்து சில நாட்கள் பருகி வர, இள நரை பாதிப்புகள் விலகி, தலைமுடி நன்கு வளரும்.

கண் எரிச்சலுக்கு

நன்னாரி வேர்ச் சாற்றை, இரு துளிகள் கண்களில் விட, கண் குளிர்ச்சியாகி, கண் எரிச்சல் விலகும்.

நன்னாரி வேர் குடிநீர்!

நன்னாரி வேரை, நன்கு அலசி உலர்த்திய பின், சற்று அரைத்து, தண்ணீரில் இட்டு சிறிது நேரம் சுட வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் காலையில் எழுந்தவுடன் சிறிது பனங் கற்கண்டு சேர்த்து பருகி வர, நீர்க் குத்தல் மற்றும் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவை விலகும்.