தானும் கருப்பு, தன் மகனும் கருப்பு ஆனால், ஹீரோயின் மட்டும் வட இந்திய பெண் வேண்டுமா? பிரபல முன்னணி இயக்குனரை தாக்கிய கஸ்தூரி

0
96

நடிகை கஸ்தூரி சமீப காலமாக டுவிட்டரில் ஏதாவது கருத்தை தெரிவிக்கிறேன் என்ற பெயரில் சர்ச்சைகளை கிளப்பி கொண்டு வருகிறார், இவர் எந்த சமூக கருத்தை தெரிவித்தால் அது யாரையாவது தாக்கி தான் தெரிவிப்பார்.

அவர் பேசுவது ஒரு சிலருக்கு பிடிக்கவும், சிலருக்கு கோபமும் வருகின்றது. அந்த வகையில் கஸ்தூரி சமீபத்தில் ஒரு விழாவில் இயக்குனர் ஷங்கர் மற்றும் பாரதிராஜாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இவர் பேசுகையில் ‘தானும் கருப்பு, தன் மகனும் கருப்பு ஆனால், ஹீரோயின் மட்டும் வட இந்திய ரியாசென் வேண்டுமா?’ என்று பாரதிராஜாவை தாக்கினார்.

அதை தொடர்ந்து ‘ஷங்கர் ஒரு படி மேலே சென்று வெளிநாட்டு ஹீரோயின் எமி ஜாக்ஸனும், தாவனி அணிய வைத்து, தமிழ்பெண் என்கின்றார்’ என்று ஷங்கரையும் பகிங்கிரமாக தாக்கி பேசியுள்ளார்.