டிசம்பரில் ரிலீசாகிறது சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

0
115

டிசம்பரில் ரிலீசாகிறது சிவகார்த்திகேயனின் அடுத்த படம் | Kanaa

சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் வருடத்திற்கு ஒன்று மட்டுமே வெளியாகி வரும் நிலையில் கடந்த மாதம் ‘சீமராஜா’ வெளியாகிய இரண்டே மாதத்தில் அதாவது வரும் டிசம்பரில் அவர் நடித்த அடுத்த படம் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

kanaa
kanaa

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படமான ‘கனா’ திரைப்படம் பெண்கள் கிரிக்கெட் குறித்த கதையம்சம் கொண்ட படம் என்பதும் இந்த படத்தில் தந்தை-மகளாக சத்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாகவும் சரியான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் பாடகர் மற்றும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு திபு நைனன் தாமஸ் என்பவர் இசையமைத்துள்ளார்.