மெகா கூட்டணிக்கு இடையில் கமலின் மகாசக்தி கூட்டணி – பிரபல நகைச்சுவை நடிகர் 

0
81

மெகா கூட்டணிக்கு இடையில் கமலின் மகாசக்தி கூட்டணி – பிரபல நகைச்சுவை நடிகர்

பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை முதலில் அதிமுக ஆரம்பித்தாலும், முதலில் முடித்தது திமுக கூட்டணிதான். தேமுதிகவின் முடிவு தெரிந்துவிட்டால் அதிமுகவின் இறுதி நிலவரமும் தெரிந்துவிடும்.

இந்நிலையில் இருமெகா கூட்டணிகளுக்கு இடையில், கமலின் கூட்டணி என்ன ஆகும் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கூறியதாவது “எத்தனை மெகா கூட்டணி இருந்தாலும் பொதுமக்கள் என்ற மகாசக்தியுடன் கமல் கூட்டணி வைத்துள்ளார். பொதுமக்கள் என்ற மகாசக்தியின் கையில்தான் தேர்தல் முடிவு உள்ளது.

ஜனநாயக நாட்டில் எத்தனை கூட்டணி அமைந்தாலும், முடிவு என்பது மக்கள் கையில்தான் உள்ளது. அனைத்து மக்களை போல் அடுத்த ஆட்சி யார் கையில் என்பதை நானும் 🙄எதிர்பார்க்கின்றேன்” என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

kamal
kamal