கடாரம் கொண்டான் படத்தின் வதந்திக்கு முற்றுபுள்ளி.! இதோ அதிகாரபூர்வ தகவல்

0
65

Kadaram Kondan Rumors – விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு கடைசியாக ஸ்கெட்ச் படம் வெளியாகியிருந்தது. அதன்பின் அவர் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார்.  மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான அப்படம் இன்னும் முடிந்தபாடில்லை.

kadaram kondan
kadaram kondan

இந்த சமயத்தில் விக்ரம் பெரிதும் எதிர்பார்ப்பது கடாரம் கொண்டான் படத்தைத்தான். கமல் தயாரிப்பில் அவரது உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்கும் இப்படம் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் வரும் மே 31-ம் தேதி வெளியாகும் என ஒரு தகவல் வேகமாய் பரவத் துவங்கியது. இதற்கு உடனடியாக பதில் சொன்ன படக்குழு, இன்னும் இப்படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முடியவில்லை என்றும் அதன்பிறகு தான் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மே 31-ம் தேதி சூர்யாவின் என்.ஜி.கே வெளியாகவுள்ள நிலையில் பெரும்பாலும் அப்படத்துடன் இப்படம் மோதும் என்றே சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு இதேபோல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படமும் விக்ரமின் ஸ்கெட்ச் படமும் மோதியிருந்தது குறிப்பிடத்தக்கது.